காலமானார் குவைத் மன்னர்புதிய மன்னராக ஷேக் நவாப் அறிவிப்பு

Default Image

குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா உடல்நலக்குறைவால் காலமானார்

குவைத் மன்னராக இருந்து வரும் அமீர் ஷேக் சபா அல் அஜ்மத் கடந்த 2008-ம் ஆண்டு முதல் மன்னராக இருந்து வருகிறார்.

கடந்த ஜூலை 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு ஜூலை 23ம் தேதி அழைத்து செல்லப்பட்டார்.

அவரது சிகிச்சை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை
இந்நிலையில் மன்னர் அமிர் ஷேக் சபா நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மன்னர் இறப்பை அடுத்து குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் புதிய மன்னராக ஷேக் நவாப் அல் அகமது சபா அறிவிக்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்