‘குட்டி சேது’ மறுபிறவி – மறைந்த தமிழ் நடிகருக்கு பிறந்த ஆண்குழந்தை.!

மறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2013ல் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சேதுராமன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு தோல் நோய் மருத்துவரும் கூட ஆவார். அதனையடுத்து வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா என ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.
கடந்த மார்ச் 24ம் தேதி திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இது சந்தானம் உட்பட பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 35 வயதில் இறந்த சேதுராமனின் இழப்பு திரையுலகிற்கு மட்டுமில்லாமல் மருத்துவ உலகிற்கு பெரிய இழப்பாகவே இருந்தது. அவர் மரணமடைந்த போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார். தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். அதற்கு ரசிகர்கள் குட்டிசேது மறுபிறவி எடுத்து வந்துள்ளார் என்று கூறி வருகின்றனர்.இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது .
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025