கௌதம் மேனன், நலன் குமாரசாமி, விஜய் மற்றும் வெங்கட் பிரபு இயக்கும் ஆந்தலாஜி திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் அமலாபால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக பிரபல இயக்குநர்கள் பலர் ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ்களை தயாரிக்கும் பணிகளில் இறங்கியுள்ளனர். சமீபத்தில் கூட பிரபல இயக்குநரான மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குநர்கள் இணைந்து 9எபிசோடுகளை கொண்ட ‘நவரசா’ என்ற வெப் சீரிஸ் ஒன்றை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதில் சூர்யா, ஜி. வி. பிரகாஷ் உட்பட பலர் நடிப்பதாகவும் கூறப்பட்டது.
அதனையடுத்து ஓடிடி தளத்திற்காக கார்த்திக் சுப்பராஜ், சுதா கோங்குரா, கௌதம் மேனன், சுஹாசினி மணிரத்னம் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் இணைந்து ஒரு ஆந்தலாஜி திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் கணேஷ் தயாரிப்பில் ஒரு ஆந்தலாஜி படத்தை பிரபல இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனன், ஏ. எல். விஜய், நலன் குமாரசாமி மற்றும் வெங்கட பிரபு ஆகியோர் இணைந்து இயக்கவுள்ளனர். ‘குட்டி லவ் ஸ்டோரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் நான்கு இயக்குநர்கள் வித்தியாசமான காதல் கதைகளை கூறுவதாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த ஆந்தலாஜி படத்தில் நலன் குமாரசாமி இயக்கும் பாகத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் ஏற்கனவே சூடு கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் பாகத்தில் அமலாபால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…