வலிமை அப்டேட் கிடைத்த குஷியில் தல தங்கை ட்வீட்..!!

லட்சுமி மேனன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கடைசியாக வலிமை அப்டேட் கிடைத்துவிட்டது என்று உற்சாகத்துடன் ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கிளைமாக்ஸ் காட்சிக்காக விரைவில் தல அஜித் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாகவும் கூறப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாத காரணத்தால் தல ரசிகர்கள் பல பிரபலங்களிடமும், அரசியல் பிரமுகர்களிடமும் அப்டேட் எப்போது என்று கேட்டு வருகின்றனர். இதனை அஜித் கண்டித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.எனவே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்க்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நேற்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்.
இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் உற்சாகத்தில் காத்துள்ளார்கள். அந்த வகையில், நடிகை லட்சுமி மேனன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கடைசியாக வலிமை அப்டேட் கிடைத்துவிட்டது என்று உற்சாகத்துடன் ட்வீட் செய்துள்ளார். அதைபோல் கடந்த சில நாட்களிற்கு முன்பு லட்சுமி மேனனிடம் தல ரசிகர்கள் வலிமை கேட்டது குறிப்பிடத்தக்கது. வேதாளம் படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடிகை லட்சுமி மேனன் நடித்திருந்தார்.
Finally ❤️???? #ValimaiUpdate https://t.co/jIOga0frE3
— Lakshmi Menon (@lakshmimenon967) March 16, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025