குங்குமப் பூவின் அற்புதமான மருத்துவ குணங்கள் ……….!!!
நாம் பலரும் குங்குமப்பூவை உணவிலும், மருத்துவ பொருளாகவும் உபயோகித்து வருகிறோம். கர்ப்பமான பெண்களும் இதனை அதிகளவில் உபயோகிப்பதை நம் அறிந்திருக்கிறோம் .இதை பற்றி நம் அறிந்திராத சில மருத்துவ குணங்களை இங்கு பார்ப்போம். குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இரு வேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும் .அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும் , குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள அம்மை நோய் குணமாகும்.