பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் வேடத்தில் இனி புது நடிகரா.?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் வேடத்தில் குக் வித் கோமாளி பிரபலமான அஸ்வின் நடிக்க உள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்று படக்குழுவினர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் .அண்ணன்-தம்பி மற்றும் கூட்டு குடும்பத்தில் உள்ள பாச பிணைப்பை கூறும் இந்த தொடரில் நடிக்கும் அனைவரும் ரசிகர்களைடையே மிகவும் பிரபலம் . அந்த வகையில் கடந்த சில நாட்களாக ரசிகர்களை மிகவும் கவர்ந்த கதிர் வேடத்தில் நடிக்கும் குமரனை காட்டவில்லை.
அதற்கு சில சமூக ஊடகங்களில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் ஊருக்கு சென்றுள்ளார் என்றும் , சினிமாவில் நடிக்க உள்ளதாகவும்,அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதால் சீரியலில் அவரை காணவில்லை என்றும் தகவல்கள் பரவி வந்தது .இந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் வேடத்தில் வேறொரு நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் வேடத்தில் குக் வித் கோமாளி பிரபலமான அஸ்வின் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தரப்பிலிருந்து கூறியதாவது , கதிர் வேடத்தில் குமரன் விரைவில் நடிப்பார் என்றும், அஸ்வின் நடிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்றும் கூறியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024