குழந்தைகள் தினவிழா யாரால் உருவாக்கப்பட்டது தெரியுமா…?
குழந்தைகள் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எவ்வளவு கஷ்டங்கள், துன்பங்கள் வேதனைகள் வந்தாலும், அனைத்தையும் மறந்து சிரிக்க வைப்பது குழந்தைகள் தான். எனவே தான் இவர்களுக்கென்று ஒரு நாள் உருவாக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் தினவிழா உலகின் பல நாடுகளில், வருடந்தோறும்,வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தினவிழாவானது 1856 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று சார்லஸ் லியோனர்டு என்ற பாதிரியாரால் தொடங்கப்பட்ட்டது. அவர் குழந்தைகளுக்கு சேவை செய்வதற்க்கென்று சிறப்பான ஒரு நாளை ஏற்படுத்தினார். தொடக்கத்தில் இதற்க்கு பூங்கா ஞாயிறு என பெயர் இருந்தது. பின்னர் குழந்தைகள் தினவிழா என்று அழைக்கப்பட்டது.