குழந்தைகள் திறந்த வெளியில் ப்ரண்ட்ஸ் உடன் ஓடியாடி விளையாடுவதால் எவ்ளோ நன்மைகள் தெரியுமா?

Default Image

இப்போ உள்ள நாட்களில் சின்ன குழந்தைகள் வளரும் போதிலே டீவி, மொபைல், வீடியோ கேம் என எல்லாத்திற்கும் அடிமையாகி விடுகின்றனர். முக்கியமாக பெரிய நகரங்களில் வசிக்கும் குழந்தைகள் இந்த சூழ்நிலைக்கு அதிகம் பலியாகின்றனர். குழந்தைகள் உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்ச்சி ரீதியாக வளர்ச்சி அடைய தங்கள் சம வயது குழந்தைகளுடன் அவர்கள் விளையாட வேண்டும்.

விளையாடுவது என்று சொன்னால் சும்மா வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டு இல்லை. அவர்கள் திறந்த வெளியில் விளையாட வேண்டும். இதனால் அவர்களுக்கு எண்ணற்ற பலன் கிடைக்கிறது. திறந்த வெளியில் குழந்தைகள் விளையாடுவதால் உண்டாகும் சில நன்மைகள் நல்லது. அதனைப் பற்றி அறிந்து கொள்ளவே இந்த பதிவு.

முக்கியமாக வீட்டுக்குள்ளேயே இருக்கும் அல்லது விளையாடும் குழந்தைகளை விட திறந்த வெளியில் நேரத்தை செலவழிக்கும் அல்லது வெளியில் விளையாடும் குழந்தைகளுக்கு நல்ல பார்வை சக்தி உள்ளது. இதன் மூலம் திறந்த வெளியில் விளையாடும் குழந்தைகளுக்கு கண்பார்வை மேம்படும் என்பது தெளிவாக தெரிய வருகிறது.சமூக திறன்கள் மேம்படுகிறது வெளியில் அதிக நேரம் விளையாடும் குழந்தைகள் அலல்து வீட்டிற்கு வெளியே அதிக நேரம் செலவழிக்கும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட அதிக சமூக திறன்நிறைந்தரவராக இருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

எல்லாருடைய தன்னம்பிக்கை, நடத்தை சார்ந்த விவரங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் திறன் போன்றவை அதிகரிக்கிறது. குறைவாக வீட்டை விட்டு வெளியே வரும் குழந்தைகள் அப்போ அப்போ கொடுமைப்படுத்துதலுக்கு ஆளாக இருக்கிறார்கள் என்பது பொதுவாக காணப்படுகிறது. சில குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதால் மற்றவர்களுடன் நேரம் செலவிடுவதால் குழந்தையின் வளர்ச்சி மேம்படுகிறது.

மேலும் மன அழுத்தம் குறைகிறது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் விளையாடும் பிள்ளைகளை விட வெளியில் நண்பர்களுடன் விளையாடுவதால் மனஅழுத்தம் குறைகிறது. எனவே குழந்தைகளை வெளியில் விளையாட விடுவது அவர்களின் மனஅழுத்தத்தைப் போக்கும். வெளிக் காற்றில் நடைபயிற்சி, விளையாடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூல ம் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்