இளைஞர்களால் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் கேடிஎம் டியுக் 250 அட்வென்சர், இந்தியாவில் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
தற்பொழுதுள்ள காலகட்டத்தில் அனைவரும் பைக்கில் லாங் ரைட் செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் இளைஞர்கள் உட்பட பலரும், தங்களது கவனத்தை அட்வென்சர் பைக்குகள் மீது செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் கேடிஎம், பஜாஜ், கவாஸாகி, பி.எம்.டபிள்யூ, ட்ரையம்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் சூப்பர்பைக் மட்டுமின்றி, இந்த வகையான அட்வென்சர் பைக்குகளை தயாரிக்க தொடங்கினர்.
டியுக் 250 அட்வென்சர்:
இந்நிலையில் கேடிஎம் நிறுவனம், தனது கேடிஎம் டியுக் 390 அட்வென்சர்-ஐ வெளியிட்டது. அந்த பைக், அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கேடிஎம் நிறுவனம், தனது புதிய கேடிஎம் டியுக் 250 அட்வென்சர் பைக்கை இந்தியாவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே கேடிஎம் டியுக் 250 அதிகளவில் இளைஞர்களை கவர்ந்து அதிகளவில் விற்கப்பட்டு வரும் நிலையில், பலரும் இந்த கேடிஎம் டியுக் 250 அட்வென்சர் அப்டேட் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.
அம்சங்கள்:
இந்த கேடிஎம் டியுக் 250 அட்வென்சர், ஹீரோ இம்பல்ஸ் 200, ராயல் என்பீல்டு ஹிமாலயன் உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக வரவுள்ளது. 390 அட்வென்ச்சர் பைக்கின் அதே உருவத்தை 250 அட்வென்ச்சர் பெறவுள்ளது. மேலும், விலைகுறைப்பு நடவடிக்கையாக இதில் சில மாற்றங்கள் செய்யவுள்ளது. இந்த 250 அட்வென்ச்சர்-ல் 249.8 சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த என்ஜின், அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 24 NM டார்கை வெளிப்படுத்தும். இதன்மூலம் நல்ல பிக்-அப் இருக்கும். அதனை இயக்க 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருக்கும். மேலும், 855 mm இருக்கை உயரம், 200 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் உள்ளது. இதனால் வேகத்தடைகளில் கீழ்பாகம் உரசும் வாய்ப்புகள் கம்மி.
இதில் 14.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பெரிய பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. பிரெக்ஸை பொறுத்தளவில், முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்ஸ் உண்டு. அதனுடன் ஏபிஎஸ் வசதியும் உண்டு. இது சுவிட்சபில் ஏபிஎஸ் ஆகும். முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியாகும் தேதி மற்றும் விலை:
இந்த கேடிஎம் டியுக் 250 அட்வென்சர், இந்தியாவில் டிசம்பரில் வெளியிடப்போவதாக கேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் விலை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் 2.50 லட்சத்திற்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…