19 வருடங்களுக்கு பிறகு ‘பஞ்சதந்திரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பிளான் போடும் கே.எஸ்.ரவிகுமார்.!
19 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடித்து சூப்பர் ஹிட்டான பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிகம் வாய்ப்பு இருப்பதாக கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமான் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் பஞ்சதந்திரம் .சிம்ரன்,ரம்யா கிருஷ்ணன்,ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்த இந்த காமெடி படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது.தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக அதிகம் வாய்ப்பு இருப்பதாக கே.எஸ்.ரவிகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அடுத்ததாக நடித்து தயாரிக்கவிருக்கும் கூகுள் குட்டப்பன் படத்தின் பூஜைக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டாருடன் ராணா படத்தினை இயக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.அதனை தொடர்ந்து கமலஹாசன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும், பொதுவாக இரண்டாம் பாகம் எடுப்பதில் தனக்கு ஆர்வமில்லை என்றும், ஆனால் தற்போது தான் எழுதியிருக்கும் கதை பஞ்சதந்திரம் 2 டைட்டிலை வைப்பதற்கான சரியான கதை என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.