‘கமர்சியல் கிங்’ கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம்! தாய்லாந்தில் தொடக்கம்!

தமிழில் நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, படையப்பா, நட்புக்காக, சமுத்திரம், பஞ்ச தந்திரம், தெனாலி, ஆதவன் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார்.
இவர் கடைசியாக சூப்பர் ஸ்டாரை வைத்து லிங்கா படமும், சுதீப்பை நாயகனாக வைத்து முடிஞ்சா இவன புடி ( கன்னடத்திலும் தயாரானது) ஆகிய படங்கள் சரியாக போகாததால் தமிழில் படத்தை இயக்க வில்லை.
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் ஜெய் சிம்ஹா படம் வெளியாகி வெற்றிபெற்றிருந்தது. மீண்டும் பாலகிருஷ்ணாவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை இன்று தாய்லாந்தில் தொடங்கியுள்ளனர். இதில் வேதிகா நாயகியாக நடிக்க உள்ளார்.