இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் நடிகர் ரஜினியை சந்தித்தபோது நடிகர் ரஜினி மீண்டும் ராணா திரைப்படத்திற்கான கதையை கேட்டதாக கேஎஸ் ரவிக்குமார் கூகுள் குட்டப்பன் படத்தின் பூஜையில் கூறியுள்ளார்.
தமிழில் ரீமேக்காகும் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்திற்கு ‘கூகுள் குட்டப்பன்’என்று டைட்டில் வைத்துள்ளதுடன் , இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயினாக பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன்,லாஸ்லியா நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கவுள்ளார்.இவர் ஏற்கனவே தேனாளி எனும் படத்தினை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது அப்போது அவரிடம் ரஜினியுடன் இணைந்து மீண்டும் எப்போது இணைந்து படம் பண்ணுவீர்களா என்று கேட்டதற்கு பதிலளித்த ” இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கண்டிப்பாக மாதம் ஒருமுறை நட்பு ரீதியாக ரஜினியுடன் தொடர்ச்சியாக பேசி வருகிறேன். அதற்குப் பிறகு சமீபத்தில் ராணா திரைப்படத்தின் கதையை மீண்டும் ஒரு முறை கூறுங்கள் என ரஜினி என்னிடம் கேட்டார். நானும் அவரிடம் கூறினேன் மிகவும் நல்ல கதை என்று பாராட்டினார். அதற்கு பிறகு எனக்கு இப்போது இருக்கும் உடல் நிலையில் இந்த திரைப்படத்தை செய்ய முடியாது விரைவில் கண்டிப்பாக செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார் ” எனவும் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.
டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான…
சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை…
அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக…
சென்னை : இன்று (பிப்ரவரி 11) தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளில் முருக பக்தர்கள் லட்சக்கணக்கானோர் தரிசனத்திற்காக…
சென்னை : இன்று இந்து கடவுள் முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி…