“கிருஷ்ணசாமி பிஜேபி_யின் கைக்கூலி” தேவேந்திரபாதுகாப்பு கூட்டமைப்பு கண்டனம்..!!

Default Image

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கும்பலுடன் இணைந்து தனது சுய ஆதாயத்திற்காக தேவேந்திரகுல மக்கள் நலன்களை காவு கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். அவரின் இந்தநடவடிக்கையை முறியடித்து தேவேந்திர குல மக்களை பாதுகாப்போம் என்று தேவேந்திர சமுக பாதுகாப்பு கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.Image result for RSS AND BJP
இதுகுறித்து சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த இந்தகூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பூ.சந்திரபோஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.முருகவேல்ராஜன், மு.ஊர்காவலன், டாக்டர் இளங்கோ, எம்.சி.கார்த்திக் ஆகியோர் கூறியதாவது:புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தேவேந்திர குல மக்களின் ஏகோபித்த பிரதிநிதி அல்ல. பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் தமிழ்நாட்டில் தனங்களுக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்குவதற்கும், ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இடையே மோதலை உருவாக்கி ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமையை சிதைப்பதற்கு திட்டம் வகுத்து அதை நடைமுறை படுத்துவதற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு கருவியாக பயன்படுத்துகிறது.
அரசியல் ரீதியாக தேவேந்திரகுல மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை இழந்து விட்ட டாக்டர் கிருஷ்ணசாமி தன்னை காப்பாற்றி கொள்ளவும், தனக்கு தன் வாரிசுகளுக்கும் அரசியல் அதிகார பதவிகளை பெறுவதற்காக பிஜேபியின் ஊதுகுழலாக மாறி செயல்பட்டு வருகிறார். அதற்காகவே பட்டியல் வெளியேற்ற கோரிக்கை கோஷத்தை முன் வைக்கிறார்.

Image result for புதிய தமிழகம் கட்சிபிஜேபி, ஆர்எஸ்எஸ் ஆகிய இயக்கங்கள் அடிப்படையில் வர்ணாசிரம மனு சமுதாய சாதிய கட்டமைப்பு வலுப்படுத்தி கட்டிக்காக்க துடிக்கும் இந்துத்துவ அமைப்புகளாகும். உண்மையில் இவ்வமைப்புகள் அட்டவணை இன மக்களின் இட ஒதுக்கீடு அரசியல் சட்ட பாதுகாப்பு எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றை நிர்மூலமாக்கி அம்பேத்காரிய தத்துவங்களை புதைகுழிக்குள் தள்ள நினைக்கின்றனர். இக் கருத்துகளை பிஜேபி, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் நேரடியாக சொன்னால் இந்தியா முழுமையும் உள்ள ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதனாலயே டாக்கடர் கிருஷ்ணசாமி போன்ற கைக்கூலிகளை பயன்படுத்தி தங்களின் நோக்கங்களை நிறைவேற்ற துடிக்கின்றன.

Image result for தேவேந்திர குல மக்கள்உண்மையில் பள்ள என்ற மள்ளரான தேவேந்திர குல மக்கள் எஸ்சி பட்டியலிருந்து வெளியேற்றப்பட்டு ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டால் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் தேவேந்திரர்கள் கல்வி பெறும் உரிமையை இழப்பார்கள்.சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி மன்றங்களில் பள்ளர்கள் தங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இழப்பார்கள். தனித் தொகுதிகளை இழப்பதோடு பொதுத்தொகுதிகளிலும் போட்டியிடும் வாய்புக்கள் மறுக்கப்பட்டு ஒட்டு மொத்தமாக பள்ளர்கள் அரசியல் உரிமை மறுக்கப்பட்டு அரசியலில் இருந்து புறக்கணிக்கப்படுவார்கள்.மேலும் மத்திய மாநில அரசு துறைகளில் ஆண்டுக்கு சுமார் 15 ஆயிரம் பள்ளர்கள் அரசு வேலை பெறும் வாய்ப்பை இழப்பார்கள். இதனினும் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் வன்கொடுமை தடுப்பு சட்ட பாதுகாப்பை இழந்து பல லட்சம் பள்ளர்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பின்மை ஏற்படுட்டு பாதிக்கப்படுவார்கள்.

Image result for எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம்

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் என்பது இந்தியா முழுவதும் சாதிவெறி கொடுமையால் பாதிக்கப்படும் சுமார் 40 கோடி பட்டியலின மக்களை பாதுகாக்கும் சட்டமாகும். அப்படிப்பட்ட சட்டத்தை சமுக நல்லிணக்கத்தை பாதிக்கும் சட்டமாகும் என்று சொல்லும் டாக்டர் கிருஷ்ணசாமியின் கூற்று 40 கோடி பட்டியலின மக்களுக்கு எதிரானது ஆகும். பள்ளர்களை மட்டும் பட்டியலை விட்டு வெளியேறி ஓபிசி ஆக வேண்டும் என்று சொல்லும் கிருஷ்ணசாமியின் கூற்று ஒட்டு மொத்த பட்டியலின மக்களின் உரிமைக்கு எதிரானது எனவே இவரின் இக்கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Image result for புதிய தமிழகம் கட்சி
மத்திய மாநில அரசு துறைகளின் மூலம் வழங்கப்படும் அட்டவணை சமுதாய துணை திட்டத்தின் படி ஆண்டுக்கு கிடைக்க வேண்டிய சுமார் ரூ 1500 கோடி நிதியை பள்ளர் சமூக மக்கள் ஓபிசி பட்டியலுக்கு மாற்றப்பட்டால் இழக்க நேரிடும்.இவற்றையெல்லாம் மறைத்து விட்டு ஓபிசி பட்டியலுக்கு சென்றால் இழிவு நீங்கும் என்று சாதிய தழுவுதலை கிருஷ்ணசாமி உயர்த்தி பிடிக்கிறார். இச்செயல் இதுவரை கிருஷ்ணசாமி பேசி வந்த அவரது புதிய தமிழகம் கட்சி பதிவு ஆவணத்தில் அவரே குறிப்பிட்டுள்ள எஸ்சி/எஸ்டி சிறுபான்மை மக்களின் நலனை பாதுகாக்கும் என்ற கொள்கைக்கு எதிரானது. ஆகவே கிருஷ்ணசாமி பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் கூட்டாளிகளின் தேவேந்திரர் பட்டியல் வெளியேற்ற நோக்கத்தை எதிர்த்து எமது தேவேந்திரர் சமுக பாதுகாப்பு கூட்டமைப்பு தொடர்ந்து போராடி முறியடிக்க பாடுபடும்.புதிய தமிழகம் கட்சியை தடைசெய்யக்கோரியும், தேவேந்திரகுல சமுதாயத்தின் பொது அடையான கொடியான சிவப்பு பச்சை வர்ண கொடியை டாக்டர் கிருஷ்ணசாமி பயன்படுத்துவதை தடை செய்ய கோரியும் இந்திய தேர்தல் ஆணையத்தையும், உரிய நீதிமன்றத்தையும் அணுகி எனது கூட்டமைப்பு சார்பாக முறையிடுவோம்.

டாக்டர் கிருஷ்ணசாமி பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் கூட்டணி தொடர்ந்து பள்ளர் இன மக்களை மூளை சலவை செய்து சக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் சிறுபான்மை மக்களோடு பகை உணர்வோடு இருக்க வேண்டி வேற்றுமை உணர்வை தூண்டி வளர்க்கின்றார்கள்.பட்டியல் வெளியேற்றத்தை எதிர்க்கும் தேவேந்திர சமூக தலைவர்கள் மீதும் ஏனைய ஒடுக்கப்பட்ட சமூக தலைவர்கள் இயக்கங்கள் மீதும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், பல ஆதரவு ஊடகங்கள் மூலமாகவும் திட்டமிட்டு அவதூறு பரப்பி இழிவு படுத்துவதை செய்து வருகிறார்கள். இதுகுறித்து பல புகார்கள் அளிக்கப்பட்டும் தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை இக்கூட்டமைப்பு சுட்டிகாட்ட விரும்புகிறது.ஆகவே டாக்டர் கிருஷ்ணசாமி பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் பட்டியல் வெளியேற்ற அரசியல் மூலம் திட்டமிட்டு தேவேந்திரர்களை சீரழித்து வரும் செயலை கண்டித்து தேவேந்திரபாதுகாப்பு கூட்டமைப்பு தொடர்ந்து சமூக வலைத்தளத்திலும், பொது தளத்திலும் , அரசியல் தளத்திலும் போராடும் என்பதை எமது கூட்டமைப்பு சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்