கிருஷ்ணா நதி நீர் குழாய் தீட்டத்திற்கு ரூ3 ஆயிரம் கோடிக்கு மேல் செலவாகும்- துரைமுருகன்
திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஆந்திராவின் ஸ்ரீசைலத்தில் இருந்து பூண்டிக்கு கிருஷ்ணா நீரை குழாய் மூலம் கொண்டு வர நிலச்சரிவு சரியில்லை என கால்வாய் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது அதிமுக அரசுதான்.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது கிருஷ்ணா நதி நீர் குழாய் மூலம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார் .இந்த திட்டத்தை நிறைவேற்ற சுமார் ரூ3 ஆயிரம் கோடிக்கு மேல் செலவாகும் என பொறியாளர்கள் கூறியுள்ளனர் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.