கோடை விடுமுறையில் வெளியாவதை வீடியோ மூலம் உறுதி செய்த சன் பிக்சர்ஸ்!!!
ராகவா லாரன்ஸ் தனது ட்ரேட் மார்க் காமெடி கலந்த திகில் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வயவேற்பை பெற்ற திரைபபடங்கள் காஞ்சனா 1 & 2! இந்த படங்களின் அடுத்த பாகமாக காஞ்சனா 3 பாகம் வெளிவர உள்ளது.
இந்த பாகத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் ஏற்கனவேவெளியான பாகங்களில் நடித்த கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன், வேதிகா, ஓவியா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த படம் இந்த வருட கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இதன் வெளியீடு பற்றியும் அதன் அனுபவம் பற்றியும் படத்தில் நடித்த நடிகர்கள் பேசியுள்ளனர்.
DINASUVADU
https://youtu.be/nu6_ZScGzKQ