கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் கொரோனா (கொவிட்-19) வைரஸின் கோர தாண்டவம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதன்முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் பாதிப்பு சீனாவைத் தாண்டி இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனா வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது.
இதனால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் வைரசால் நேற்று (வியாழக்கிழமை) வரை பலியின் எண்ணிக்கை 1,383-ஆக உயர்ந்துள்ளது. அதில் நேற்று மட்டும் 121 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வைரசால் புதிதாக 5,090 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,000-ஐ தொட்டுள்ளது. இதனிடையே இந்த கொடூர வைரசால் சுகாதார ஊழியர்கள் 1,716 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சீன மருத்துவனையின் மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நடனமாட வைத்து, நோயிலிருந்து மீள்வது குறித்து நம்பிக்கையூட்டி வருகின்றனர். சீனாவில் கொரோனா வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஹுபே மாகாணம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது. வைரஸ் பரவுவதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யாரும் யாருடைய வீட்டிற்கும் செல்லக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முனைப்பில் தீவிர ஆய்வு செய்து வருகிறது உலக சுகாதாரத்துறை.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…