கொத்தமல்லியின் நன்மைகள்…!!!
கொத்தமல்லியை அதிகமாக சமையல்களில் மட்டும் தான் பயன்படுத்துகிறோம். இதிலுள்ள பல நன்மைகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
கொத்தமல்லிக்கீரையை சுத்தம் செய்து பச்சையாகவே மென்று சாப்பிட்டு வந்தால் கண் வலி, கண் எரிச்சல் நீங்கும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது. இன்சுலின் சுரப்பை தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயை குறைக்கும் தன்மை வாய்ந்தது.