Kosovo நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு!
கொசோவோ நாடாளுமன்றத்தில் அண்டை நாடான மாண்டநீக்ரோவுடன் எல்லை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சியினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அமளியில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களில் வெளியான இது தொடர்பான வீடியோ காட்சிகள் பலர் கண்களைக் கசக்கிக் கொண்டும் மூக்கை உறிஞ்சிக் கொண்டும் காட்சியளித்தனர். வாக்கெடுப்பைத் தடுக்க எதிர்க்கட்சியினர் இது போன்ற உத்திகளில் ஈடுபவடுவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.