கோஷ்டி திரைப்படம் எனக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் – காஜல் அகர்வால்..!!
என் சினிமா வாழ்க்கையில் இந்த கோஷ்டி திரைப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் கோஷ்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வாலுடன் மயில்சாமி, சத்யன், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
திகில் கலந்த திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் பேயாக மட்டும் நடிக்காமல் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை குறித்து நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது ” என் சினிமா வாழ்க்கையில் இந்த கோஷ்டி திரைப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த திரைப்படத்தை கல்யாண் இயக்கியுள்ளார் சுதன் சுந்தரம் ஜெயராம் இருவரும் சேர்ந்து தயாரிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் 4 மணி நேரம் மேக்கப் போட்டு நடித்து உள்ளேன். எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு வீட்டிலேயே நடித்து ஒத்திகை பார்த்துக் கொண்டேன் ” என்றும் கூறியுள்ளார்.