கொசஸ்தலை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணை நிரம்பி வந்ததால் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து இதுவரை 4 முறை கொசஸ்தலை ஆற்றில் தண்ணீரை ஆந்திர மாநில அதிகாரிகள் திறந்து விட்டனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் 5-வது முறையாக சுமார் 300 கன அடி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் பள்ளிப்பட்டு பகுதியை நள்ளிரவு 3 மணி அளவில் கடந்தது. இதனால் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழ்கால்பட்டடை, வெளியகரம், நெடியம், சாமந்தவாடா, புண்ணியம் ஆகிய பகுதியில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதையொட்டி மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே புரண்டோடும் வெள்ளத்தை பொருட்படுத்தாமல் தரைப்பாலங்களை பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். மேலும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் பலர் குடும்பத்தோடு திறன்பேசிகளில் சுயப்படம் எடுத்து சென்றதையும் காண முடிந்தது. வேறு எந்த அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக இது தொடர்பாக பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…