கொழுப்பை கரைக்கும் கத்தரிக்காய்…! இதை சாப்பிட்டு பாருங்களேன்..!!!
கத்தரிக்காய் என்பது நமது அருகாமையில் உள்ள கடைகளில் கூட எளிதாக கிடைக்க கூடிய காய்கறி தான். ஆனால் சிலருக்கு சில காய்கறிகள் பிடிக்காது என்பதால் ஒதுக்குகின்றனர்.
நமது உடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவோ பணம் செலவு செய்கிறோம். ஆனால் கத்தரிக்காயை தொடர்ந்து சாப்பிடும் போது நமது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து உடல் எடையை குறைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
சாதாரணமாக எல்லா சீசன்களிலும், குறைந்த விலையில் கிடைக்கும் காய் கத்தரிக்காய். நீர்சத்து அதிகம் கொண்ட காய்களில் மிகவும் ருசியானது. இரும்புசத்து, புரதம், நார்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம் இதில் நிறைந்துள்ளது.
உடல் சூட்டை அதிகரிக்க செய்யும் காய் என்பதால், மழை காலம், குளிர் காலம் மற்றும் இரவு நேரங்களில் கூட சாப்பிடலாம். இதில் உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க கூடிய அனைத்து சத்துக்களும் அதிகமாகவே உள்ளது.
DINASUVADU