கொள்ளுப்பருப்பின் மருத்துவ குணங்கள்…!!!
கொள்ளுப்பருப்பு என்பது நமது உடலுக்கு முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். நமது உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் தரவல்லது. நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கொள்ளுப்பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். கொழுப்புத்தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளு பருப்புக்கு உண்டு. உடல் உறுப்புகளை பலப்படுத்தும் குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி காணாமல் போய்விடும்.