சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு
கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பனர்ஜி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மம்தா பனர்ஜி அறிவித்துள்ளதாவது:
கொரோனா பரவல் காரணமாக நவம்பர் மாதம் நடக்க இருந்த கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவானது அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கபடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கோல்கத்தா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்படுகிறது.இதே போல் கோவா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க்து.