பெங்களூர் அணியில் கோலி இல்லை ? : ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல் -இல் வருடாவருடம் ப்ளே ஆஃப் சுற்றில் தகுதி பெறாவிட்டாலும், ரசிகர் மத்தியில் மவுசு குறையாத ஒரே டீம் ராயல் சாலன்ஜார்ஸ் பெங்களூரு அணி. காரணம், அந்த டீமில் கோலி, ஏபி.டிவில்லியர்ஸ், கெயில், என நட்சத்திர பேட்ஸ்மேன்களின் பேட்டிங் தான்.
பெங்களூரு அணியின் ஓனர் விஜய் மல்லையா மீது பல வழக்குகள் உள்ளதால், அந்த அணியின் கேப்டனாக உள்ள கோலிக்கு தர்ம சங்கடத்தை உண்டாகியுள்ளதாக தெரிகிறது. அதலால் இந்த டீமை விட்டு விலகுவதாக தெரிகிறது.
இதனை நிருபிக்கும் வகையில் ஐபிஎல் நிர்வாகம் அந்தந்த அணியியிலிருந்து 3 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என கூறியிருந்தது. இந்நிலையில், அவரை அணி நிர்வாகம் தக்க வைக்காமல், ஏலத்தில் விட்டுள்ளது.
source : dinasuvadu.com