நடுவரிடம் விதியை மீறிய விராட் கோலி !போட்டி ஊதியத்தில் 25% அபராதம் விதித்து ஐசிசி அதிரடி
ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் விதிகளை மீறி நடுவரிடம் நடந்து கொண்டதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு போட்டி ஊதியத்தில் 25% அபராதம் விதித்துள்ளது ஐசிசி.
நேற்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றிபெற்றது.
ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் கள நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஷமி விசிய ஒரு ஓவரின் 4-வது பந்தை ஹஸ்ரத்துல்லா எதிர்கொண்டார்.அந்த பந்திற்கு ஷமி எல்பிடபிள்யு (LBW) முறையில் அவுட் கேட்டார்.ஆனால் கள நடுவர் அவுட் தர மறுத்தார்.பின் ஷமிஎல்பிடபிள்யு (LBW) -வாக இருக்கும் என உறுதியாக கூறியதால் டிஆர்எஸ் (DRS) முறைக்கு சென்றார் இந்திய அணி கேப்டன் விராட்.ஆனால் மூன்றாம் நடுவர் நடுவரும் அவுட் இல்லை என்று தெரிவித்தார். இதனையடுத்து விராட் கள நடுவரிடம் சென்று கைகூப்பி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் விதிகளை மீறி நடுவரிடம் நடந்து கொண்டதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு போட்டி ஊதியத்தில் 25% அபராதம் விதித்துள்ளது ஐசிசி.