கோடநாடு வீடியோ..!பொங்கல் திரைப்படமாக வெளியீடப்பட்டுள்ளது..!அமைச்சர் பேச்சு..!!
தமிழகத்தின் முதல்வர் மீது கொள்ளை, கொலைக்கு காரணம் இவர்தான்.என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2 வது வீடாக இருந்த கோடநாடு பங்களா கொள்ளை-கொலை விவகாரமானது விஸ்ரூபமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தலைதூக்கியுள்ளது.இது குறித்து வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களை சந்திப்பில் இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் கோடநாடு விவகாரத்தில் யாரோ அரசியல் காழ்ப் புணர்ச்சியோடுஒரு திரைப்படக் கதை இயக்கி அதை பொங்கலுக்கு வெளியிட்டுள்ளனர். மேலும் படத்தில் உள்ள சஸ்பென்ஸ் விரைவில் வெளியே வரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.