முதல்வர் மீது குண்டுகளாக விழுந்த கொடநாடு குற்றச்சாட்டுகள்..! 2 பேர் டெல்லியில் கைது..!!!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயன் ஆகியோர் கூறிய தகவல்கள் தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கொடநாட்டில் கொள்ளை,கொலை அங்கு நடந்த மர்மங்களுக்கு காரணம் தமிழக முதல்வர் தான் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கூறிய பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குற்றச்சாட்டுகளை வைத்த மேத்யூ மற்றும் சயன் ஆகியோரை விசாரணை செய்ய தமிழகத்தில் இருந்து துணை ஆணையர்கள் தலைமையிலான இரண்டு தனிப்படை போலீஸார் டெல்லி விரைந்தனர்.இருவரும் துவாரகா பகுதியில் சயன், மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.இன்னும் மர்ம்மாக மறைக்கப்படும் கொடநாடு கொள்ளை மற்றும் அடுத்தடுத்து கொலை குறித்து மக்கள் கேள்வி எழுப்பிகின்றனர்.