"அறிவும் அன்பும்" – கொரோனாவுக்கு கமல் எழுதியுள்ள புதிய பாடல்!
கொரோனா குறித்த மக்களின் அச்சத்தை போக்க நடிகர் கமலஹாசன் எழுதியுள்ள அன்பும் அறிவும் பாடல் வீடியோவுடன் வெளியானது.
கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தால் மக்கள் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில், மக்களுக்கு கொரோனா மீதான அச்சம் களைய நடிகரும், மக்கள் நீதி மைய கட்சி தலைவருமாகிய கமலஹாசன் அன்பும் அறிவும் எனும் தலைப்பில் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.
இவர் எழுதியுள்ள இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த பாடலை இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, அனிரூத், சங்கர் மகாதேவன், தேவிஸ்ரீபிரசாத், ஸ்ருதிஹாசன், முகன், சித்தார்த் மற்றும் பலர் இணைந்து பாடியுள்ளனர்.
கொரோனா விழிப்புணர்வு பாடலாக கருதப்பட்டுள்ள இந்த பாடலில் மனிதநேயம் எனும் வார்த்தை அதிகமாகவும், கொரோனா எனும் வார்த்தை பாடலில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் இன்று காலை 11 மணியளவில் திங்க் மியூசிக் இணையபக்கத்தில் வெளியாகியுள்ளது. வெளியாகி ஒரு மணிநேரத்தில் 1 லட்சத்துக்கும் மேட்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது.
உலகநாயகன் கமலின் அறிவும் அன்பும் பாடல் வீடியோ இதோ,