விளக்கை ஏன் வாயினால் காற்றை ஊதி அணைக்கக்கூடாது?இது தான் காரணமா..!
விளக்குகள், மெழுகுவர்த்திகளை வாயினால் காற்றை ஊதி ஏன் அணைக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு திசையும் பஞ்சபூதங்களுடன் தொடர்புடையது. அக்னி, அதாவது நெருப்பு, தென்கிழக்கு திசைக்கு தொடர்பானது. அக்கினி சம்பந்தமான அனைத்தையும் இந்த திசையில் தான் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். நமது உடல் ஐந்து கூறுகளால் ஆனது. அவை நீர், காற்று, வானம், பூமி மற்றும் நெருப்பு ஆகும்.
இந்த ஐந்து உறுப்புகளில் மிகக் குறைந்த அளவிலேயே நெருப்பு காணப்படுவதாகவும், அது நமது செரிமான அமைப்புடன் தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது. சூரியன் நெருப்பின் சின்னமாகவும் இருக்கிறது. மேலும் உலகம் முழுவதையும் அதன் பிரகாசத்தால் ஒளிரச் செய்கிறது. நெருப்பின் உறுப்பு நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது, நாம் ஒருபோதும் நெருப்புடன் விளையாடக்கூடாது.
தெய்வங்களில் அக்னிக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, நம் வாயிலிருந்து காற்றை ஊதி விளக்கு, மெழுகுவர்த்தி அல்லது தீப்பெட்டியை ஊதி அணைக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. இது தரித்திரமான செயலாக கருதப்படுகிறது. இதனால் செல்வம் விலகி விடும். அதனால் இவ்வாறு தீயை அணைக்கவே கூடாது. மேலும், தீக்குச்சியை ஒருபோதும் கால்களுக்குக் கீழே நசுக்கி அணைக்கக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.