பேரீட்சை பழத்தின் எண்ணிலடங்கா நன்மை தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்!

Default Image

பேரிச்சம்பழம் பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்யப்படும், இந்த பேரிட்சை உடல் எடையை கணிசமாக குறைப்பதால் டயட் உணவுகளில் ஒன்றாக இதை பெரும்பாலும் எடுத்துக்கொள்கின்றனர். இந்த பேரிச்சம் பழத்தின் நன்மை சொல்லி முடியாதது, சர்க்கரை வியாதி இருப்பவர்கள் கூட அதிக இனிப்பு நிறைந்த பேரீச்சம் பழத்தை சாப்பிடலாம்.

பேரிச்சம் பழத்தின் நன்மைகள்

முக்கியமாக டயட் உணவுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. பேரீட்சை பழம், மஞ்சள், தேன் ஆகியவற்றை கலந்து காலையில் வெதுவெதுப்பான பாலில் கரைத்து சாப்பிட்டால் நிச்சயமாக உடல் எடையை குறைக்கும்.

கர்ப்பிணிகளின் கவலையே பிரசவத்தின் போது ஏற்படக்கூடிய வலி தான். இந்த வலியை போக்க கூடிய முக்கியமான ஒரு பொருளாக இந்த பேரிச்சம் பழம் பயன்படுகிறது. கர்ப்பம் தரித்த பின் தினமும் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டால் வலி இல்லாத சுகப்பிரசவத்தை இது தருகிறதாம். மேலும், உடல் பருமனையும் குறைக்கும்.

மந்த புத்தியை மாற்றி, அதிக அறிவாற்றல் மற்றும் நினைவாற்றலை தருகிறது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தேனில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால் விரைவில் சுகம் கிடைக்கும். ஆண்கள் இந்த பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது. அதனால், சிந்திக்கக்கூடிய நரம்பு மண்டலம் வலுப்பெற்று நல்ல பலன் கிடைக்கும். ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு சுத்தமான பேரிச்சம் பழம் பாலில் கலந்து சாப்பிடும் போது நல்ல பலன் கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்