வெஜிட்டேரியன் முட்டை சப்பாத்தி செய்வது எப்படி என்பதை பற்றி அறிவீரா
வெஜிட்டேரியன் முட்டை சப்பாத்தி இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுவகைகளில் ஒன்று. இதனை செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
- வெஜிட்டேரியன் முட்டை சப்பாத்தி செய்வது எப்படி என்பதை பற்றி அறிவீரா?
வெஜிட்டேரியன் முட்டை சப்பாத்தி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி – 2
கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் கடலை மாவு ,வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, சில்லி ப்ளேக்ஸ், உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஓரளவு கட்டியாக கலந்து வைத்து கொள்ளவும்.
பின்பு தோசை தவாவை எடுத்து அடுப்பில் வைத்து கல் சூடானதும் கலந்து வைத்துள்ள பேஸ்டை சப்பாத்தியில் தடவி முன்னும் பின்னும் நன்றாக எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி ரெடி.