இன்று பஞ்சாப்-மும்பை மோதல்!அஸ்வின் தேர்ந்தெடுக்கும் உத்தேச வீரர்கள் விவரம் இதோ
இன்று நடைபெறும் பஞ்சாப் அணியின் உத்தேச வீரர்கள் விவரம் கணிக்கப்பட்டுள்ளது .
இந்த வருட ஐபில் போட்டியில் பெரும் சர்சையை ஏற்படுத்தியது ராஜஸ்தான் அணியுடன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வினின் மன்கட் விக்கெட் தான்.அதன் பின்னரும் கொல்கத்தா அணியுடன் அடுத்து நடைபெற்ற போட்டியில் உள்வட்டத்துக் குள் 3 பீல்டர்களை நிறுத்தியது மட்டும் அல்லாமல் நடுவர்களுடன் அஸ்வின் வாக்குவாதம் செய்தது அஸ்வினின் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளது.
ஆனால் முதல் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றாலும் ,இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்த பெரும் சர்சைக்குரிய அஸ்வினின் செயல்கள்,கடைசி போட்டியில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது உள்ளிட்டவை அந்த அணிக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது.
இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகின்றது.இந்த மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது.
ஒரு அணி வெற்றி பெற மிகவும் முக்கியமான ஓன்று அந்த அணியின் 11 வீரர்களை தேர்வு செய்வதுதான்.அது தான் அந்த அணியின் வெற்றி தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்.அந்த வகையில் இன்று நடைபெறும் பஞ்சாப் அணியின் உத்தேச வீரர்கள் கணிக்கப்பட்டுள்ளது .
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கணிக்கப்பட்ட வீரர்கள் : ரவிசந்திரன் அஸ்வின்(கேப்டன்), மாயன்க் அகர்வால் ,கே.எல் ராகுல், கிறிஸ் கெய்ல், சர்பராஸ் கான் ,மந்தீப் சிங் ,டேவிட் மில்லர் ,ஹர்தஸ் வில்ஜன் ,அன்கித் ராஜ்புட் ,ஆண்ட்ரூ டை மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.