சவுதி அரேபிய இளவரசர்கள் 2 பேரை மன்னர் சல்மான் அதிரடியாக பதவியிலிருந்து நீக்கினார்.!

Default Image

ராணுவ அமைச்சகத்தில் சந்தேகத்திற்கிடையேயான நிதி பரிவர்த்தனைகள் ஈடுபட்டதாக இரு இளவரசர்களை பதவி நீக்கம் செய்தற் மன்னர் சல்மான்.

இஸ்லாமியர்களின் இரண்டு புனித மசூதிகளின் பாதுகாப்பாளரும், சவூதி அரேபியாவின் மன்னருமான சல்மான் பின் அப்துல் அசிஸ், இரண்டு அரச குடும்ப உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்து, ஊழல் தொடர்பான விசாணைக்கு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டார். இதன்படி, ஏமனில் நடைபெற்று வரும் போரில் சவூதி அரேபிய தலைமையிலான கூட்டுப் படைகளின் தளபதியான இளவரசர் ஃபகத் பின் துர்கி, சவூதி அரேபியாவின் வடமேற்கு பிராந்தியமான அல் ஜீஃப் துணை ஆளுநராக இருந்த அப்துல்லா பின் ஃபகத் ஆகியோரை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராணுவ அமைச்சகத்தில் சந்தேகத்திற்கிடையேயான நிதி பரிவர்த்தனைகள் நடந்ததில் இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, பட்டது இளவரசர் முகமது பின் சல்மானின் பரிந்துரைப்படி, அவர்கள் பதவி நீக்கம் செய்துள்ளனர். மேலும், அவர்கள் மீது ஊழல் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, மார்ச் மாதத்தில் லஞ்சம் மற்றும் பொது அலுவலக பணத்தை எடுத்தது தொடர்பான குற்றச்சாட்டில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 300 அரசு அதிகாரிகளை மன்னரின் அதிகாரிகள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்