குவைத்தின் மன்னர் ஷேக் நவாப் அல் அகமது அல் சபா தனது 86-வது வயதில் காலமானார். ஷேக் நவாப் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் ஒரு வாரத்துக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத தொடர்ந்து இன்று உயிரிழந்தார். இவரது மரண செய்தியை அறிவிப்பதற்கு முன்பதாக குவைத் அரசு தொலைக்காட்சி குர்ஆன் வாசகங்கள் வாசிக்கப்பட்டன என தகவல் வெளியாகி உள்ளது.
இதைதொடர்ந்து குவைத்தின் அரசு தொலைக்காட்சியில் “நமது ஷேக் நவாப் அல் அகமது அல் சபா காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று” கூறியதாக கூறப்படுகிறது. ஷேக் நவாஃப் கடந்த 2006 இல் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபாவால் பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார். இதற்குப் பிறகு 2020 ஆம் ஆண்டில் ஷேக் சபா அல் அகமது அல் சபாவின் மரணத்திற்குப் பிறகு, ஷேக் நவாஃப் மன்னராக பதவியேற்றார்.
நாட்டின் மன்னராக ஆவதற்கு முன்பு ஷேக் நவாஃப் குவைத்தின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். குவைத்தின் அதிகாரம் இப்போது ஷேக் நவாப்பின் ஒன்றுவிட்ட சகோதரரும் குவைத்தின் துணை மன்னருமான ஷேக் மெஷல் அல் அகமது அல் ஜாபர் (83) கைகளுக்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…