குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அகமது காலமானார்..!

குவைத்தின் மன்னர் ஷேக் நவாப் அல் அகமது அல் சபா தனது 86-வது வயதில் காலமானார். ஷேக் நவாப்  மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் ஒரு வாரத்துக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையில்  முன்னேற்றம் ஏற்படாத  தொடர்ந்து இன்று உயிரிழந்தார். இவரது மரண செய்தியை அறிவிப்பதற்கு முன்பதாக குவைத்  அரசு தொலைக்காட்சி  குர்ஆன் வாசகங்கள் வாசிக்கப்பட்டன என தகவல் வெளியாகி உள்ளது.

இதைதொடர்ந்து குவைத்தின் அரசு தொலைக்காட்சியில் “நமது ஷேக் நவாப் அல் அகமது அல் சபா காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று”  கூறியதாக கூறப்படுகிறது. ஷேக் நவாஃப் கடந்த 2006 இல் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபாவால் பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார். இதற்குப் பிறகு 2020 ஆம் ஆண்டில் ஷேக் சபா அல் அகமது அல் சபாவின் மரணத்திற்குப் பிறகு, ஷேக் நவாஃப்  மன்னராக  பதவியேற்றார்.

நாட்டின் மன்னராக ஆவதற்கு முன்பு ஷேக் நவாஃப் குவைத்தின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். குவைத்தின் அதிகாரம் இப்போது ஷேக் நவாப்பின் ஒன்றுவிட்ட சகோதரரும் குவைத்தின் துணை மன்னருமான ஷேக் மெஷல் அல் அகமது அல் ஜாபர் (83) கைகளுக்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Modi - Pakistan PM
Indian BSF PK Singh arrested by Pakistan Army
india vs pakistan war
Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son