தனது மாமாவை கொலை செய்தார் வடகொரிய அதிபர் கிம்??- ட்ரம்ப் தகவல்!
வடகொரிய அதிபர் கிம், தனது சொந்த மாமாவை எப்படி கொலை செய்தார் என தன்னிடம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளதாக “வுட்வேர்ட்” என்ற பத்திரிகையாளர் எழுதிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக வடகொரிய அதிபர் கிம் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அவரின் உடல்நிலை தற்பொழுது கவலைக்கிடத்தில் உள்ளதாகவும், பொது இடங்களில் அவர் தென்படாததால், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் அதனை பொய் என நிருப்பித்து, அவர் ஒரு தொழிற்சாலையை திறக்கும் புகைப்படம் வெளியானது.
இதனையடுத்து, தான் இறந்துவிட்டதாக கூறும் செய்திக்கு அவர் முற்றுபுள்ளி வைத்தார். அதுமட்டுமின்றி, அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலைக்கு சென்றுள்ளதாகவும், அவரின் ஆட்சி அதிகாரத்தை அவரின் தங்கையிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், அவரின் தங்கை ஆட்சியை நிர்வகித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
அதனையும் பொய் என நிரூபித்து, அதிபர் கிம் ஜாங் உன் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் பேசினார். அதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதனால் தாம் இறந்துவிட்டதாக கூறும் வதந்ததிகளுக்கு அவர் மேலும் முற்றுபுள்ளி வைத்தார்.
இந்தநிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் இந்தாண்டு ஜூலை வரை நடத்தப்பட்ட நேர்காணலை வைத்து “வுட்வேர்ட்” என்ற பத்திரிகையாளர், “ரேஜ்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் அவர், வடகொரிய அதிபர் கிம், தனது மாமாவை கொலை செய்ததாக அந்த புத்தகத்தில் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியானது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் நடத்தப்பட்ட ஒரு நேர்காணலில், வடகொரிய அதிபர் கிம் பற்றிய கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், நாங்கள் இருவரும் 2018 ஆம் ஆண்டு சிங்கப்பூரில்தான் சந்தித்ததாக கூறினார். மேலும், அவர் மிக புத்திசாலியான என குறிப்பிட்ட ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம்மின் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் தன்னிடம் பகிர்ந்துள்ளதாகவும், அதேபோல் அவரின் சொந்த மாமாவை எப்படி கொலை செய்தார் எனவும் தன்னிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.