வடகொரிய நாட்டின் நிறுவனர் கிம் இல் சங்-ன் பிறந்த நாளை முன்னிட்டு வண்ணமயமான வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. தற்போதைய அதிபர் கிம் ஜோங் உன்-ன் தாத்தாவும், வடகொரிய நாட்டை தோற்றுவித்தவருமான கிம் இல் சங்-ன் பிறந்த நாளை அந்நாட்டினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அரசு சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தலைநகர் பியாங் யாங்கில் ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.