“அதிபர் கிம் நலமுடன் இருக்கிறார்.. அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்!”- ட்ரம்ப்

கிம் ஜாங் உன் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.
கடந்த சில தினங்களாக வடகொரிய அதிபர் கிம் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அவரின் உடல்நிலை தற்பொழுது கவலைக்கிடத்தில் உள்ளதாகவும், தெரிவித்து வந்தனர். மேலும், பொது இடங்களில் அவர் தென்படாததால், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால் அதனை பொய் என நிருப்பித்து, அவர் ஒரு தொழிற்சாலையை திறக்கும் புகைப்படம் வெளியானது. இதனையடுத்து, அதுமட்டுமின்றி, அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலைக்கு சென்றுள்ளதாகவும், அவரின் ஆட்சி அதிகாரத்தை அவரின் தங்கையிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், அவரின் தங்கை ஆட்சியை நிர்வகித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
அது பொய் என நிரூபிக்கும் விதமாக, வடகொரியாவில் கடந்த சில தினங்களுக்கு முன், மழை மற்றும் சூறாவளியின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதில் பொதுமக்களும் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுடன் பேசினார். அதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
வடகொரியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதாகவும், விவசாயிகளுடன் பேசும்போது மாஸ்க் அணியாமல் பேசினார். அதுமட்டுமின்றி அந்த புகைப்படத்தில் கிம் ஜாங் சுறுசுறுப்பாக இருந்தார். இந்நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் எனவும், அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.