சின்ன தம்பி 2 குறித்து கேட்ட ரசிகருக்கு குஷ்புவின் பதில் அளித்துள்ளார்.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியான திரைப்படம் சின்ன தம்பி. ராதா ரவி, மானோரம்மா, கவுண்டமணி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையும் படைத்தது. இந்நிலையில், சின்னதம்பி படத்தில் நடித்த நடிகை குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் எடையை குறைத்து சில புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் வைரலானது.
அதைபோல் நடிகர் பிரபுவும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திறகாக உடல் எடையை குறைத்தார். அந்த புகைப்படங்களும் வைரலானது.
இதனையடுத்து பிரபு, குஷ்பு இருவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ரசிகர் ஒருவர் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதில் ” இயக்குனர் பி.வாசு சந்திரமுகி 2 எடுப்பதற்கு முன்பு சின்ன தம்பி 2 எடுக்கலாம்” என பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையில், குஷ்பு கை கும்பிட்டு ஸ்மைலி ஏமோஜை பதில் அளித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…