கேஜிஎஃப் 2 டீசர் தற்போது யூடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்திய சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என்ற சாதனையை படைத்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ் ,அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படம் ஜூலை 16- ஆம் தேதி வெளியாகும் என்று முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாகவும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த திரைப்படத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் தேதி டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த டீசர் தற்போது யூடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்திய சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என்ற சாதனையை படைத்துள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…