கே.ஜி.எப்-2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கே ஜி எஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ் ,அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கின்றனர்.
ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகர் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த திரைப்படம் ஜூலை 16- ஆம் தேதி வெளியாகும் என்று முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாகவும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது அதன்படி, கே.ஜி.எப்-2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவிவருகிறது. விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…