கன்னடத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் வெளியாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கேஜிஎப். இப்படத்தில் கன்னட நடிகர் யாஷ் நாயகனாக நடித்து இருந்தார் பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இப்படம் அடுத்த வருட ஜூலை மாதம் தான் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார். யாஷ் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரமான அதிரா எனும் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.
இப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் நேற்று கே.ஜி.எப் முதல் பாகம் வந்து ஒரு வருடம் ஆனதை அடுத்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாக முதல் போஸ்டர் வெளியானது. இதிலும் ராக்கி பாய் தனது ட்ரேட் மார்க் கம்பீர நடையுடன் இருக்கிறார். படத்தின் மீதான எதிர்பார்ப்பும் தற்போதும் அதிகரித்துள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…