அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் பொறுப்பு ஏற்கிறார்.
கடந்த பிப்ரவரி 2020 இல் தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது,ஜோ பைடன்,ஒரு கறுப்பின பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்க பரிந்துரைக்கப்படும் என உறுதியளித்தார்.இந்நிலையில், அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் பொறுப்பு ஏற்கிறார்.இதனை செனட் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும்,இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில்:”நீதிபதி ஜாக்சனின் உறுதிமொழி நமது தேசத்திற்கு ஒரு வரலாற்று தருணம்.அமெரிக்காவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு படியை எடுத்துள்ளோம்.அவர் ஒரு நம்பமுடியாத நீதியரசராக இருப்பார்,இந்த தருணத்தை அவருடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி ஜாக்சன்,கொலம்பியா மாவட்ட (டிசி) அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார்.மேலும் இதற்கு முன்பு 2013 மற்றும் 2021 க்கு இடையில் டிசியில் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…