கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா…?
கேரட் நம் அருகாமையில் உள்ள கடைகளில் கிடைக்க கூடிய ஒரு காய்கறி தான். இது நமக்கு மலிவாக கிடைக்க கூடிய ஒன்று தான். இது நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்த கூடிய ஆற்றல் கொண்டது.
கேரட் ஜூஸ்க்கு தேவையான பொருட்கள் :
- கேரட் – 1
- தேங்காய் துருவல் – ஒரு கைப்பிடி
- பால் – கால் டம்ளர்
- பனை வெல்லம் – இரண்டு டீஸ்பூன்
- ஏலக்காய் – 1
செய்முறை :
பாலை நன்கு கொதிக்க வைத்து, ஆற வைத்து கொள்ள வேண்டும். பின் கேரட் மற்றும் தேங்காய் துருவலையும், பாலையும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின் பனை வெல்லம் மற்றும் ஏலக்காயை சேர்த்து அரைத்தால் கேரட் ஜூஸ் தயாராகி விடும்.
பயன்கள் :
- இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்.
- கண்பார்வை தெளிவுறும்.
- மலட்டு தன்மை நீங்கும்.
- இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
- முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
- மஞ்சள் காமாலை குணமாக நல்ல மருந்து.