கேரளா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகர் சூர்யா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கோழிக்கோடு விமானநிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 குழந்தைகள் உட்பட 190 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அன்பானவர்களை இழந்து துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், காயமடைந்த அனைவரும் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்வதாகவும், மீட்பு பணியில் ஈடுபட்ட மலப்புரம் மக்களுக்கு பிக் சலூட் என்றும், விமானிகளுக்கு மரியாதை செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…