கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ் இந்தியா திரைப்படத்தை ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் பெங்குயின் படம் அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும், தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்திலும், நித்தீன் சத்யாவின் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். அதனையடுத்து ‘குட் லக் சகி’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார்.அதனையடுத்து இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படத்திலும், இயக்குநர் செல்வராகவன் நடிக்கும் சாணிக் காயிதம் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள மிஸ் இந்தியா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்த பின்னரும் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்படாத நிலையில் பல படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட சூர்யாவின் சூரரை போற்று படத்தினை அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிக்க நரேந்திர நாத் இயக்கி ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் மிஸ் இந்தியா. கீர்த்தி சுரேஷூடன் ஜெகபதி பாபு, நதியா, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்க தமன் இசையமைத்துள்ளார். இதனை ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும், நெட் பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 10 கோடிக்கு பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…