கிருஷ்ணா சைதன்யா இயக்கத்தில் நித்தீன் நடிக்கும் பவர் பேட்ட திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில், தற்போது அவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிஸியாக உள்ளாராம். இவர் பழம்பெரும் நடிகையான சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்து அதற்காக தேசிய விருதையும் பெற்றார் .அவர் மலையாள சினிமாவின் சீனியர் நடிகரான மோகன்லால் அவர்களின் மரைக்கார்:அரபிக்கடலின்றே சிம்கம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரஜினியின் அண்ணாத்த படத்திலும் இணைந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மேலும் டோலிவுட்டின் முன்னணி இளம் நடிகரான நித்தீனுடன் RangDe என்ற தெலுங்கு படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் பென்குயின், மிஸ் இந்தியா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் .
கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கர்ப்பிணி பெண்ணாக நடித்த கீர்த்தி சுரேஷின் பெங்குயின் படம் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மீண்டும் அந்த இளம் ஹீரோவுடன் இணைந்து நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் கிருஷ்ணா சைதன்யா இயக்கத்தில் நித்தீன் நடிக்கும் பவர் பேட்ட திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் இது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…