ரிலீஸ் தேதியை குறித்த கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்.!
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள குட் லக் சகி திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.தற்போது இவர் பொன்னியின் செல்வன்,அண்ணாத்த,சாணிக் காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி 4 தெலுங்கு படங்களிலும் ,2 மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
அவ்வாறு அவர் நடித்து முடித்துள்ள திரைப்படங்களில் ஒன்று குட் லக் சகி.நாகேஷ் குக்குனூர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆதி , ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படமானது விளையாட்டு கதைக்களத்தை கொண்டது.கடந்தாண்டே வெளியாகவிருந்த இந்த படமானது லாக்டவுன் காரணமாக தள்ளி சென்றது .தில் ராஜூ தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தினை ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Here’s the announcement you’ve been waiting for! #GoodLuckSakhi is coming to theatres on 3rd June! ❤️
Save the date! ????
#GoodLuckSakhiOnJune3rd@AadhiOfficial @IamJagguBhai @nkukunoor @ThisIsDSP #DilRaju @SandeepRaaaj @sudheerbza @shravyavarma @WorthAShotArts pic.twitter.com/9P6GBem4ba
— Keerthy Suresh (@KeerthyOfficial) March 1, 2021