குடும்பத்துடன் குருவாயூர் கோவிலுக்கு விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்..!!
நடிகை கீர்த்தி சுரேஷ் குடும்பத்துடன் குருவாயூர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் தமிழில் சாணிக் காயிதம், அண்ணாத்த, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி 4 தெலுங்கு படங்களிலும் ,2 மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் எனக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக பரவி வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. சில இணையதளங்களில் நான் திருமணம் நான்கு முறை வெவேறு நபர்களுடன் திருமணம் நடைபெறவுள்ளதாவும் வதந்தி செய்திகள் பரவியது. இது போன்ற செய்திகளை பரப்ப வேண்டாம். எனது திருமணம் நடக்க இன்னும் சில காலங்கள் உள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், கேரள பாரம்பரிய உடையணிந்து தனது குடும்பத்துடன் குருவாயூர் கோவிலிருக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அதற்கான சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து உடல் எடையை குறைத்து வருவதால் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளார்கள்.