தந்தை தயாரிப்பில் தனுஷின் மாரி -2 பட வில்லனுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!
தனது தந்தையின் தயாரிப்பில் உருவாகும் மலையாளப்படம் ஆகிய வாஷி எனும் படத்தில் கீர்த்தி சுரேஷ் தனுஷின் மாரி 2 பட வில்லனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவரும், அவரது நடிப்பில் வெளியாகிய மகாநதி திரைப்படத்திற்க்காக தேசிய விருது பெற்ற கதாநாயகியுமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தொடர்ச்சியாக தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, மகேஷ் பாபுவுடன் சர்காரு,மோகன்லாலுடன் மரைக்காயர் என பல மொழி படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரக்கூடிய கீர்த்தி சுரேஷ் தனது தந்தையின் இயக்கத்தில் உருவாகக்கூடிய மலையாளப்பட மாகிய வாஷி எனும் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விஷ்ணு ஜி ராகவ் அவர்களின் இயக்கத்தில் உருவாகக் கூடிய இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் டொவினோ தாமஸ் என்பவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த டொவினோ தாமஸ் தான் தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.